Thursday, April 1, 2010

தமிழனின் பெருமை


விழ விழ எழுவான் விரத்தமிழன் வாழ்வான் சாவிலும் வணங்கத்தமிழன்மாழான் தமிழன் மறுபடி எழுவான்ஆழ்வான் ஈழம் அதுவே உண்மைஆயிரம் வீரர்கள் தீயினில் போயினர்ஆயினும் போரது நீறும், புலிஆடும் கொடி நிலம் ஆறும்.பேயிருள் சூழ்ந்திடும் கானகம் மீதினில்பாசறை ஆயிரம் தோன்றும், கருப்பைகளும் ஆயுதம் ஏந்தும்.மத்தளம், பேரிகை, கொட்டு புலிப்படைமாபெரும் வெற்றிகள் சூடும், அந்தசிங்கள கூட்டங்கள் ஓடும்.“”வா பகையே… வா…வந்தெம் நெஞ்சேறி மிதி.பூவாகவும் பிஞ்சாகவும் மரம் உலுப்பிக் கொட்டு.வேரைத் தழித்து வீழ்த்து.ஆயினும் அடிபணியோம் என்பதை மட்டும்நினைவில் கொள்!”வேரோடு பிடுங்கி எறியப்பட்டாலும் !சுடுகாட்டின் சுவாசம் இருக்கும் வரைஎங்கள் தாய்மண்ணில் விடுதலை வாசம் வீசும் !உணர்வோடெழுவாய் உலகத்தமிழா உரிமைக்காக உரத்துக் குரல் தரஎழு எழு தமிழா விரைந்து நீ எழு அழுவதை விடுத்து ஆர்த்தெழு தமிழா